'ஆர்.சி.பி.' அணியின் புதிய 'லோகோவுக்கு' மாடல் யார் தெரியுமா?... கடைசியில் அந்த 'பவுலரே' கிண்டல் அடித்து விட்டார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 17, 2020 12:39 PM

ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியின் புதிய லோகோ, தன்னுடைய பந்து வீச்சின் ஆக்ஷன் போலவே உள்ளது என இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கிண்டலாக கூறியுள்ளார்.

RCB team\'s new logo is similar to the action of bowling pumra

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளும் திடீர் மாற்றத்தை சந்தித்துள்ளன.

அணியின் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கத்தின் படம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இந்த லோகோ  மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லோகோவின் வடிவம் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கிண்டலாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் அவர், "கூல் லோகோ. இது என்னுடைய பந்துவீச்சின் ஆக்ஷன் போலவே உள்ளது" என தெரிவித்துள்ளார். லோகோவை பார்க்கும் பொழுது சிங்கம், பும்ரா பந்து வீசுவதைப் போல் இருப்பதை உணர முடிகிறது. பும்ராவின் இந்த கிண்டல் கருத்தை பலரும் ரசித்து வரவேற்றுள்ளனர்.

Tags : #IPL #RCB #BANGALURU #CRICKET TEAM #RCB LOGO #BUMRAH