கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Dec 30, 2022 09:45 AM

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பீலே மரணமடைந்திருப்பது உலக கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Brazil Football Legend Pele Passed away at 82 due to cancer

Also Read | "24 மணி நேரம் Bigg Boss பாக்குறவங்க கிட்ட மாட்டிப்பா, அவ பண்ற சேட்டை..".. அசிம் சொன்ன வார்த்தை.. பதிலுக்கு ஷிவின் சொன்னது தான்!!

பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுபவர். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. தன்னுடைய 22 வருட கால்பந்து விளையாட்டு வரலாற்றில் 1282 கோல்கள் அடித்து, பிரேசில் அணியின் எப்போதைக்குமான லெஜெண்ட் வீரராக கருதப்படுபவர் பீலே.

Brazil Football Legend Pele Passed away at 82 due to cancer

எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ (Edson Arantes do Nascimento) என்ற இயற்பெயர் கொண்ட பீலே, பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. செப்டம்பர் 2021 இல் கேன்சரால் அவர் பாதிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரது பெருங்குடலில் இருந்து கட்டி ஒன்று அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கேன்சருக்கான கீமோதெரபி சிகிச்சைக்கு பீலேவின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என பிரேசில் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் பீலே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Brazil Football Legend Pele Passed away at 82 due to cancer

சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வந்தார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று பீலேவின் குடும்பத்தினர் அவருடன் மருத்துவமனையில் தங்கியிருந்தனர். இந்நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக அவருடைய மகள் அறிவித்திருக்கிறார். இதனால் உலக கால்பந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Also Read | பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. பிரதமரின் உருக்கமான ட்வீட்..!

Tags : #BRAZIL FOOTBALL #BRAZIL FOOTBALL LEGEND #BRAZIL FOOTBALL LEGEND PELE PASSED AWAY #CANCER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brazil Football Legend Pele Passed away at 82 due to cancer | Sports News.