சொந்த கிராமத்தில் கிரிக்கெட் அகடமியை துவங்கிய நடராஜன்.. இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா! முழு விவரம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் தனது சொந்த கிராமத்தில் கிரிக்கெட் அகடமியை துவங்கியுள்ளார்.
நடராஜன் தன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் தனது பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை சில மாதங்களுக்கு முன் திறந்தார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்த நடராஜன், தனது யாக்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இதனால், கடந்த 2020-21 ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜன் நெட் பவுலராக இடம்பிடித்தார்.
பிரதான வீரர்களின் காயத்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் அறிமுகமானார்.
2020 - 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று வகையான (டி20, ஒருநாள், டெஸ்ட்) போட்டிகளிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்த பிறகு முழங்கால் காயம் காரணமாக 2021 ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நடராஜன், கடந்த ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து வருடம் நடக்கும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாட உள்ளார்.
சில நாட்களுக்கு முன் நடராஜன் தனது கிராமத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் புல் தரை பிட்ச அமைக்கும் பணிகளில் கிராமத்தினருடன் சேர்ந்து ஈடுபட்டார். களிமண் (கிளே) பிட்சாக இருந்ததை புல் தரை (டர்ஃப்) பிட்சாக மாற்ற வேண்டும் என நடராஜன் ஆசைப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊர் மக்களோடு சேர்ந்து தனது கனவான கிரிக்கெட் அகாடமிக்கு ஏற்றவாறு இந்த மைதானத்தை நடராஜன் உருவாக்கினார். இது தொடர்பான வீடியோவை நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடராஜன், தனது பெயரில் கிரிக்கெட் அகடமியை சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் துவங்க உள்ளார். மார்ச் மாதம் முதல் நடராஜன் உருவாக்கி உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த அகடமி நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டர்ஃப் பிட்ச் & 2 கான்கிரீட் பிட்ச்சுடன் வலைப்பயிற்சிக்கு 4 டர்ஃப் பிட்ச்களையும் உருவாக்கி உள்ளார். மேலும் உயர்தர வசதியுடன் ஜிம் வசதியுடம் இந்த அகடமியில் உள்ளது