'இவரு வந்தா ஆல் சைடு பவுண்டரி பறக்கும்' ... 200 இவரு தான் அடிக்க போறாரு ... ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன 'பிராட் ஹாக்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 16, 2020 05:57 PM

உலக டி 20 போட்டிகளில் இரட்டை சதமடிக்க இந்த ஒரு இந்தியன் வீரரால் மட்டும் தான் முடியும் என ஆஸ்திரேலியா வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Brad Hogg choose this player for 200 in T20 matches

ஒரு நாள் போட்டியில் கூட பல வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ள நிலையில் டி 20 போட்டிகளில் யாரும் இதுவரை இரட்டை சதம் அடித்ததில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் டி 20 போட்டிகளில் யார் இரட்டை சதம் அடிப்பார்கள் என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஹாக், 'உலகிலேயே டி 20 போட்டிகளில் இரட்டை சதமடிக்க தகுதியான ஒரே வீரர் இந்திய அணியை சேர்ந்த ரோஹித் ஷர்மா ஆகும். நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள இவர், அனைத்து திசைகளுக்கும் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டும் திறமையுடைவர்' என தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் இதுவரை மூன்று இரட்டை சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி  20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச் குவித்த 172 ரன்களே தனி நபர் அதிகபட்சமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #BRAD HOGG #ROHIT SHARMA #T20