இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல...! 'டி-20'ல தோக்குறதுக்கு 'ஐபிஎல்' தான் காரணமா...? - முன்னாள் வீரர் கூறியுள்ள 'அதிரடி' பதில்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலகக்கோப்பையில் இந்தியா மோசமாக ஆடுவதற்கு ஐபிஎல் தான் காரணம் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்திய அணி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக கலக்கும் என நினைத்த நிலையில் இந்திய வீரர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று கொண்டிருந்ததால் இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு செல்லுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி மிக மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் நமீபியா போன்ற அணிகளோடு ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. அதோடு, இந்திய அணி இந்த நிலைக்கு வர காரணம் ஐபிஎல் தொடர் தான் முக்கிய காரணம் எனவும் பெரும்பாலானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத்திற்கு முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'இந்திய அணியின் தோல்விகளுக்கு ஐபிஎல் தொடர் காரணம் எனக் கூறுவது முட்டாள் தனமாக ஒன்று. ஐபிஎல் தொடரின் மூலமே பல வீரர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐபிஎல் போட்டி பல வீரர்களின் பொருளாதார தேவைகளுக்கும் உதவுகிறது. ஏதாவது ஒன்று சொல்லவேண்டும் என தேவையே இல்லாமல் ஐபிஎல் தொடர் விமர்சிப்பது சரியல்ல' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
