உலகின் மிக 'உயரிய' நோபல் பரிசு.. மூன்று பேருக்கு 'கூட்டாக' பகிர்ந்தளிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 07, 2019 06:59 PM

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும் நோபல் பரிசு இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2019 Nobel Prize for Medicine jointly awarded to Kaelin, Ratcliffe, Se

அந்தவகையில் இன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், 2019-ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மனித உடல் செல்கள் குறித்த ஆய்விற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

 

இயற்பியல், வேதியியல் பிரிவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளது.

 

Tags : #NOBELPRIZE