VIDEO: ஒரே 'இடி'தான்... சடாரென கீழே 'விழுந்த' இந்திய வீரர்... 'கைகொடுத்து' தூக்கிய சக வீரர்... என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 28, 2020 12:02 AM

நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி 17.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்தியா தற்போது 2-0 என முன்னிலை வகித்து வருகிறது.

IND Vs NZ: Shardul Thakur and Colin Munro collision goes viral

நேற்றைய போட்டியின்போது கடைசி பவர்பிளே ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். அவரது பந்தை எதிர்கொண்ட காலின் முன்ரோ அதை சிங்கிளுக்கு தட்டிவிட்டு ஒரு ரன் ஓடுவதற்கு முயற்சி செய்தார். அப்போது அவரை ரன் அவுட் செய்துவிடும் வேகத்துடன் எதிரே வந்த தாகூரை ஓடும் வேகத்தில் சடாரென இடித்து முன்ரோ அவரை கீழே தள்ளிவிட்டு விட்டார். கீழே விழுந்த தாகூர் அதே நிலையில் அமர்ந்திருக்க, அவரருகே ஓடிவந்த சாஹல் அவரது தலையைக் கோதிவிட்டு ஆறுதல் சொல்லி கைகொடுத்து தூக்கிவிட்டார்.

பின்னர் நிலைமை உணர்ந்து தாகூரிடம் திரும்பி வந்த முன்ரோ அவருக்கு கை முஷ்டியைக் காட்ட பதிலுக்கு தாகூரும் முஷ்டியால் அவரது முஷ்டியை தட்டினார்.  தற்போது சமூக வலைதளங்களில் இந்த மோதல் வீடியோ வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.