'அவருக்கு' மட்டும் ஸ்கெட்ச் போடும் 'நியூசி' வீரர்கள்... என்ன செய்யப் 'போகிறார்' கேப்டன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 27, 2020 11:32 PM

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ஹாமில்டனில் (நியூசிலாந்து) நாளை மறுநாள் (ஜனவரி 29) நடைபெறுகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வென்றதால் தற்போது 2-0 என டி 20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் 3-வது டி20 போட்டி மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ 3rd T20: Navdeep Saini may replace Shardul in Team India

இந்த நிலையில் இதுகுறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், '' நாங்கள் 2 ஆட்டங்களில் வென்றதால் 3-வது போட்டியில் நியூசிலாந்து எங்களுக்கு எதிராக கடுமையாக திரும்பப் போகிறது என்பது எனக்கு தெரியும். எனினும் நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம். எங்களது சிறந்த பவுலிங் அணியால் நியூசிலாந்து போன்ற ஒரு வலுவான அணியை மிகக்குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது.பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை இது ஒரு சமமான களமாக இருக்கும்,'' என தெரிவித்தார்.

ஆனால் இந்திய அணியில் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சு 2 போட்டிகளிலும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. முதல் போட்டியில் 3 ஓவர்களுக்கு 44 ரன்கள் விட்டுக்கொடுத்த ஷர்துல் , 2-வது போட்டியிலும் 2 ஓவர்களுக்கு 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ஜடேஜா, பும்ரா போன்றவர்களின் ஓவர்களில் அடக்கி வாசித்த குப்தில், முன்ரோ ஆகியோர் தாகூரின் பந்துவீச்சில் வெளுத்து கட்டினர். இதனால் 3-வது டி20 போட்டியில் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனியை கோலி உள்ளே கொண்டு வருவாரா? அல்லது 2 போட்டிகளில் வென்றுள்ளதால் இதே அணியை மாற்றாமல் தொடருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.