'சாப்பாட்ட கண்ட்ரோல் பண்ண முடியல...' 'வெயிட் அதுபாட்டுக்கு ஏறிட்டே போகுது டாக்டர்...' அப்படியா...? - ஒண்ணும் கவலைப்படாதீங்க, அதுக்காக ஒரு 'டார்ச்சர் டிவைஸ்' இருக்கு...!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்சாப்பிடுவதை கட்டுப்படுத்த வாயை திறக்க முடியாத வகையில் அறிவியலாளர்கள் புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
ஒரு சிலருக்கு சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியாமல் சராமாரியாக சாப்பிட்டு உடல் பருமன் பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். இந்த தீர்க்கும் வகையில் சாப்பிடும் போது வாயை குறிப்பிட்ட அளவிற்கு மேல் திறக்கவிடாமல் தடுக்கும் டார்ச்சர் டிவைஸ் என்னும் கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டின் ஓட்டாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு தான் இந்த புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளது. உடல் எடைக் குறைப்புக்காக உருவாக்கியுள்ள இந்த காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட கருவியை பற்கள் இடையே பொறுத்திக் கொள்ள முடியும்.
இதனை பொருத்திவிட்டால் வாயை வெறும் 6 மி.மீ. அளவிற்கு மட்டுமே திறக்க முடியும். இதன்காரணமாக திட உணவுப் பொருட்களை சாப்பிட முடியாது. முழுக்க முழுக்க திரவ உணவுகளை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். இதனால் உடல் எடை கணிசமான அளவு குறைவது உறுதி என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வாய் அடைக்கும் டிவைஸ் மூலம் வாயைத் திறக்க முடியாதே தவிர பேசவோ, சுவாசிக்கவோ எந்த சிரமும் இருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த கருவியை பரிசோதித்த சிலருக்கு இரு வாரங்களில் 3.36 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட அளவு எடை குறைந்ததும் வழக்கமான சிகிச்சை முறைக்கு திரும்பி விட வேண்டும் என்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.