‘மாற்றங்கள்’ வரப்போகுது... ‘பதவி’யில் இருந்து விலகும்... பிரபல நிறுவனத்தின் தலைவர்!
முகப்பு > செய்திகள் > வணிகம்By Sangeetha | Dec 20, 2019 05:44 PM
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக, ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களி்ல் ஒன்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா. டிராக்டர், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் கோலோச்சி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக ஆனந்த் மஹிந்திரா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது டவிட்டர் பக்கத்தில், ‘எம் அண்ட் எம் நிறுவனத்தில், பல நிர்வாக ரீதியான மாறுதல்கள் வரவுள்ளன. நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து, 2020-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பதவி விலகுகிறேன். பல முக்கியத் நிர்வாகிகள் அடுத்த 6 மாத்தில் பொறுப்பேற்கவுள்ளனர்.
செபி மற்றும் நிறுவனத்தின் வாரிய வரையறைகளுக்கு உட்பட்டு இந்த மாற்றம் நடைபெறுகிறது. எம் அண்ட் எம் நிறுவனம் தொடர்ந்து தனது தனித்தன்மையையும், நன்மதிப்பையும், ஒழுக்கத்தை தொடர்ந்து பராமரிக்கும்’ எனக் கூறியுள்ளார். அதேவேளையில், நிர்வாக ரீதியாக அல்லாத தலைவராக, அவர் தொடர்ந்து நிறுவனத்தை வழிகாட்ட உள்ளார்.
Delighted to announce our leadership transition plan which reflects the Group’s commitment to good governance. I am grateful to the board & nominations committee for conducting a diligent & rigorous year-long process that will ensure a seamless transition https://t.co/iw34PPxmCg
— anand mahindra (@anandmahindra) December 20, 2019