‘சொன்ன வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா’!.. இந்தியா ஜெயிச்சதும் வெளியான அந்த போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றதை அடுத்து, தான் உறுதியளித்தபடி ஒரு விஷயத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா செய்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 -2 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி இந்தியா கோப்பையை வென்றது.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 3 போட்டிகளில் விளையாடி, 27 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரை பாராட்டு விதமாக, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டரில் அக்ஷர் பட்டேல் கண்ணாடி அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இந்தியாவின் இந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக, இந்த சன் கிளாஸை நான் வாங்க விரும்புகிறேன். அவை என்ன பிராண்ட். நான் எங்கே வாங்க முடியும்?’ என பதிவிட்டிருந்தார்.
இதனை அடுத்து, இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டி20 போட்டிக்கு முன்னதாக ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, ‘இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் விதமாக, அக்சரின் சன் கிளாஸை நான் பெறப் போவதாக அறிவித்திருந்தேன். தற்போது ஒரு ஜோடி கண்ணாடியை நான் வாங்கியுள்ளேன். இன்றைய போட்டியைக் காண அனைவரும் ஆவலாக உள்ளனர். டிவி பார்க்க எந்த சன் கிளாஸ்களும் தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனது மனைவிக்கு கூட இவருக்கு என்ன ஆகிவிட்டது என நினைக்கத் தோன்றும். ஆனாலும், இது நல்ல அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கலாம்’ என பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவுக்கு ரிப்பளை செய்த ஒருவர், சன் கிளாஸ் போட்டுகொண்டு கிரிக்கெட் பார்க்கும் புகைப்படத்தை பதிவிடுமாறு ஆனந்த் மஹிந்திராவிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, ‘இந்தியா தொடரை கைப்பற்றியதும் புகைப்படத்தை பதிவிடுகிறேன். இந்த சன் கிளாஸ், ஒரு போட்டிக்கான அதிர்ஷ்டமாக மட்டும் அமையாமல், இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும்’ என தெரிவித்திருந்தார்.
OK, have to fulfill a commitment. Here’s the promised selfie with my “Axar” shades...My new good luck charm that’s proven its worth...😊 pic.twitter.com/VdLSMCNkrs
— anand mahindra (@anandmahindra) March 21, 2021
இந்நிலையில் இந்திய அணி டி20 தொடரை வென்றதால், தான் கூறியதை போல அக்ஷர் பட்டேல் அணிந்திருந்த சன் கிளாஸை போலவே ஒரு கண்ணாடியை அணிந்து அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ‘நான் கூறியபடி அதிர்ஷடம் நடந்துவிட்டது’ என ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
