IPL 2022 : வலியால் துடித்து.. நிலைகுலைந்த மயங்க் அகர்வால்.. மைதானத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.. வைரலாகும் 'வீடியோ'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், நேற்றுடன் முடிவடைந்தது. இதன் கடைசி போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் தகுதி பெற்று விட்டது.
இதனால், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த கடைசி லீக் போட்டி, ஐபிஎல் தொடரில் எந்தவித மாற்றத்தையும் உண்டு பண்ணாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 43 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 39 ரன்கள் எடுத்திருந்தார்.
வெற்றியுடன் முடித்த பஞ்சாப் கிங்ஸ்
அதே போல, அதிரடி வீரரான லியாம் லிவிங்ஸ்டன் சிக்ஸர்களை பறக்க விட, 16 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது பஞ்சாப் அணி. 22 பந்துகளை சந்தித்த லிவிங்ஸ்டன், 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் மொத்தம் 49 ரன்களை எடுத்திருந்தார். இந்த வெற்றியுடன் மொத்தம் 14 புள்ளிகளை எடுத்த பஞ்சாப் அணி, 6 ஆவது இடத்தையும் பிடித்திருந்தது.
வேகமாக வந்த பந்து
இதனிடையே, பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. உம்ரான் மாலிக் வீசிய 7 ஆவது ஓவரில், பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் களமிறங்கினார். உம்ரானின் 150 கி.மீ வேகத்தில் வந்த பந்து, தன்னுடைய விலா எலும்பு பகுதியில் வேகமாக பட, சில நொடிகள் வலி தாங்க முடியாமல் துடித்தார் மயங்க்.
நிலை குலைந்த மயங்க்
ஒரு ரன் ஓடி எடுத்ததும் தரையில் சரிந்த மயங்க் அகர்வாலை, அணியின் பிசியோ மைதானத்தில் வந்து பார்த்து முதலுதவி செய்தனர். இதன் காரணமாக, சில நிமிடங்கள் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மயங்க் அகர்வாலும் பேட்டிங் செய்தார். முன்னதாக, ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த போது, கடைசி பந்தில் பேட்டிங் செய்ய வந்த உம்ரான் மாலிக்கிடம், மயங்க் அகர்வால் ஏதோ பேசியதாகவும் ரசிகர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத் அணி ஆடிய 14 போட்டிகளிலும், 150 கி.மீ வேகத்திற்கு மேல் உம்ரான் மாலிக் பிந்து வீசி, வேகமாக பந்து வீசியதற்கான விருதினை அனைத்து போட்டியிலும் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.