ஆந்திராவையே அலறவிடும் விநோத திருவிழா.. பல ஆண்டுகளாக தொடரும் காதல் கதை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅண்டை மாநிலமான ஆந்திராவின் ஒரு கிராமத்தில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் 'வறட்டியடி திருவிழா' நடைபெற்றுவருகிறது.
200 மீ உயரத்தில் தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த கார்.. அலறி ஓடிய மக்கள்.. என்ன ஆச்சு?
யுகாதி பண்டிகை
தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அஸ்பாரி மண்டலத்தில் உள்ள கைருப்பாலா கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் யுகாதிக்கு அடுத்த நாள் வித்தியாசமான வறட்டியடி திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், வறட்டியை ஒருவர் மீது ஒருவர் எறிகிறார்கள்.
புராண காதல்
ஆந்திராவின் கைருப்பாலா கிராமத்தில் புராண காலத்தில் வசித்து வந்ததாக நம்பப்படும் பத்ரகாளி, வீரபத்ர சுவாமி ஆகியோர் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்ததாகவும் அந்த காதலை ஏற்க மறுத்த இரண்டு பேரின் பெற்றோர்கள் காதலர்களை பிரித்து விட்டதாகவும் கூறுகிறார்கள் இந்த பகுதி மக்கள்.
இந்த காதலினால் பத்ரகாளி, வீரபத்ர சுவாமி வீட்டினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் வீட்டார் மனமிரங்கி இருவருக்கும் திருமணம் செய்துவைத்ததாக நம்பப்படுகிறது.
திருவிழா
இந்நிலையில் பத்ரகாளி, வீரபத்ர சுவாமி இருவரின் காதலை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதிக்கு அடுத்தநாள் இந்த பகுதி மக்கள் தங்களது வீட்டில் சேகரித்து வைத்திருக்கும் வறட்டிகளை இங்குள்ள கோவிலில் கொண்டுவந்து காணிக்கையாக்குகிறார்கள். அதன் பிறகு இம்மக்கள் அந்த வறட்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து கொண்டாடுகிறார்கள்.
இந்த திருவிழாவின் போது, வறட்டி பட்டு யாருக்காவது காயம் ஏற்பட்டால், கோவிலில் இருந்து கொண்டுவரப்படும் சிறப்பு மஞ்சள் காயத்தில் பூசப்படுகிறது. இந்த வறட்டியடி திருவிழா முடிந்தபிறகு, வீரபத்ரசாமி, பத்திரகாளி ஆகிய தெய்வங்களுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
கர்நாடகாவிலும்..
இதேபோல, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள கும்மத்புரா கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் சாணியெறி திருவிழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்ததும், ஊர் மையத்தில் கொட்டப்படும் சாணியை எடுத்து ஒருவர்மீது ஒருவர் எறிந்துகொள்ளும் பண்டிகை இங்கே நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.