‘மொதல்ல அந்த நம்பருக்கு டயல் பண்ணனும்’.. ‘அப்றம் பின்பக்கமா போனா ஒரு பொண்ணு வரும்’.. ‘உள்ளாடைக்குள் இருந்து எதையோ எடுத்து தரும் பெண்!’- அழகு நிலையத்தில் போலீஸார் கண்ட திடுக்கிடும் காட்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் குறிப்பிட்ட அழகு நிலையத்திற்கு சில ஆண்கள் அடிக்கடி சென்று வருவதை போலீசார் ரகசியமாக கண்காணித்துள்ளனர்.

அப்படி சென்ற ஆண்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்பதை போலீசார் ரகசியமாக கண்காணித்து தெரிந்துகொண்டுள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள அந்த அழகு நிலையத்துக்கு பின்னால் அவர்கள் செல்வதை பார்த்து, அவர்களின் பின்னால் சென்ற போலீசார் அங்கு ஒரு காட்சியை கண்டுள்ளனர்.
அங்கு அந்த அழகு நிலைய ஊழியரான ஒரு பெண் வெளியே வந்து தன் உள்ளாடைக்குள் இருந்து எதையோ எடுத்து கொடுப்பதை போலீஸார் கவனித்திருக்கிறார்கள். விசாரித்ததில் அந்த அழகு நிலைய உரிமையாளர் Samantha Cox என்கிற 30 வயதான பெண் 5000 பவுண்டுகள் மட்டும் தான் சம்பாதித்து வருவதாகவும், ஆனால் 50 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள காரை அவர் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது. இந்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணான இருப்பதால் சந்தேகத்தை போலீஸாருக்கு ஏற்படுத்தியது.
இதனை அடுத்து போலீசார் இன்னும் ஆழமாக கவனித்ததில் அந்த அழகு நிலையத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்து வந்தது தெரியவந்தது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் அந்த அழகு நிலையத்தில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி நம்பருக்கு அழைப்பார்களாம். பின்னர் அவர்கள் அழகு நிலையத்துக்கு பின்னால் சென்றால் என்கிற பெண் வெளியே வந்து, தன் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த போதை பொருளை எடுத்து ரகசியமாக கொடுத்துவிடுவார்.
இப்படித்தான் அழகு நிலையம் என்கிற பெயரில் அதன் உரிமையாளர் Samantha Cox என்பவர் போதை வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இதனை அடுத்து அவரும், உதவிய Joanne Zblewska என்பவர் உட்பட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
