ரத்த வாந்தின்னு ஹாஸ்பிடல் போன இளைஞர்.. எக்ஸ்ரே பார்த்துட்டு அரண்டு போன டாக்டர்கள்.. "எல்லாத்தையும் பேப்பர்ல சுருட்டி சாப்பிட்டு இருக்காரு"

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 15, 2023 07:44 PM

உடல்நலக் குறைவு காரணமாக சிலர் மருத்துவமனை செல்லும் சமயத்தில் பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு ஏதாவது திடுக்கிடும் விஷயம் தெரிய வந்து பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டு பண்ணும் செய்திகள் குறித்து நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

Youth admitted in hospital doctors removes 56 blades from stomach

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | 35 வருஷம் கழிச்சு ரீயூனியன்.. பார்த்ததும் மலர்ந்த பழைய காதல் .. கேரள ஜோடி எடுத்த பரபரப்பு முடிவு..

அந்த வகையில் இளைஞர் ஒருவர் ரத்த வாந்தி எடுப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில் அவரை சோதித்த மருத்துவர்களுக்கு திடுக்கிடும் பின்னணி தெரிய வந்துள்ளது.

ரத்த வாந்தி எடுத்த இளைஞர்..

ராஜஸ்தானின் சன்சோர் மாவட்டத்தில் உள்ள டட்டா என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் யாஷ்பல் சிங். 25 வயதான இவர், கணக்காளராக வேலை பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது. இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வரும் சூழலில், வீட்டிலிருந்த சமயத்தில் திடீரென யாஷ்பல்லுக்கு ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி தனது நண்பர்களிடம் யாஷ்பல் சிங் தெரிவிக்கவே அவர்கள் உடனடியாக மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்.

Youth admitted in hospital doctors removes 56 blades from stomach

Images are subject to © copyright to their respective owners.

வயிற்றுக்குள் ஏதோ உலோகம் மாதிரி..

முதலில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த சமயத்தில் யாஷ்பல்லின் வயிற்றுக்குள் ஏதோ உலோகம் போல் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தான் சோனோகிராபி மற்றும் எண்டோஸ்கோபி சோதனை மேற்கொண்ட சமயத்தில் யாஷ்பல்லின் வயிற்றில் எக்கச்சக்கமான பிளேடுகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளனர்.

எந்த தாமதமும் ஏற்படுத்தாமல் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு யாஷ்பல் சிங்கின் வயிற்றில் இருந்த பிளேடுகள் அனைத்தையும் மருத்துவர்கள் வெளியேற்றி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இது தொடர்பாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, பிளேடுகளை அதன் பேப்பர் கவரோடு யாஷ்பல் சிங் சாப்பிட்டுள்ளதாகவும், பேப்பரோடு பிளேடு இருந்ததால் வலி தெரியாமல் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.

Youth admitted in hospital doctors removes 56 blades from stomach

Images are subject to © copyright to their respective owners.

பிளேடை பேப்பரோடு உண்ட இளைஞர்..

அப்படி இருக்கையில், வயிற்றுக்குள் போன பின்னர், பேப்பர் கரைந்த சூழலில் அவை வயிற்றில் பிரச்சனையை உண்டு பண்ணி உள்ளது. இதனால் வாயு உருவாகி இரத்த வாந்தி எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, பிளேடுகளையும் இரண்டாக உடைத்தே பேப்பரோடு யாஷ்பல் சாப்பிட்டுவந்துள்ளார்.

இதுபற்றி அவருடைய உறவினர்கள் தெரிவிக்கும் போது யாஷ்பல் செயலில் எந்த மாற்றத்தையும் உணரவில்லை என்றும் இப்படி பிளேடுகளையும் ஏன் உட்கொண்டார் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read | போனை எடுக்காத பெண்.. கதவைத் திறந்து உள்ளே போன பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "ரெண்டு பேரு பக்கத்தில இப்டி ஒன்னும் இருந்திருக்கா?"

Tags : #HOSPITAL #YOUTH #ADMIT #HOSPITAL #DOCTORS #BLADES #STOMACH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth admitted in hospital doctors removes 56 blades from stomach | India News.