'உயிரோட' இருந்திருந்தா கனடா பறந்திருப்பார்...முதல் 'வகுப்பில்' தேர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 30, 2019 12:23 AM
கடந்த 12-ம் தேதி சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ(23) துரைப்பாக்கம் -பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை நோக்கி ஸ்கூட்டியில் செல்லும்போது, சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன் கனடாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்ட சுபஸ்ரீ அதற்கான பணிகளில் மும்முரமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இறப்பதற்கு முன் கனடா செல்வதற்காக எழுதிய தேர்வில் சுபஸ்ரீ தற்போது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தனது கனவுக்காக உழைத்து அதில் தேர்ச்சி பெற்றாலும் அதனை கொண்டாட சுபஸ்ரீ தற்போது இல்லை என்ற சோகம்,அவரது குடும்பத்தை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.