"ஆர்டர் செஞ்சது 12,000 ரூபா டூத் ப்ரஷ், ஆனா பார்சல்ல வந்தது..".. பெண் வாடிக்கையாளரின் வைரல் TWEET.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Feb 17, 2023 10:59 AM

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஷாப்பிங் செய்யும் பழக்கம் ஏராளமான மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது.

Woman Orders electric toothbrush receieve masala items

                                   Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அட, இதைக்கூட டாட்டூ போட முடியுமா?.. அன்பு மனைவிக்கு கணவனின் சர்ப்ரைஸ்.. "இப்படியும் இருக்க முடியும்ன்னு ஏங்க வெச்சுட்டாப்ல"

நேராக கடைகளுக்கு சென்று பொருட்களை பார்த்து பார்த்து வாங்குவதை விட போனில் மிகவும் நிதானமாக தங்களுக்கு தேவைக்கேற்ப, விலை உள்ளிட்ட விஷயங்களையும் மிக பொறுமையாக பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து கொள்வதால் பலரும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளை பயன்படுத்தியும் வருகின்றனர். வாடிக்கையாளர்கள் பயன்பாடு அதிகமாக இருப்பதன் காரணமாக பண்டிகை காலங்களில் பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடிகளையும் அறிவிக்கின்றன.

அதே வேளையில், ஆன்லைன் மூலம் சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களும் நமது வீட்டை வந்து சேரும் விஷயம் நிறைய நடப்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். தற்போது அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான், இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது கவனம் பெற்றும் வருகிறது.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஆன்லைனில் எலக்ட்ரிக் டூத் பிரஷ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் மதிப்பு சுமார் 12,000 ரூபாய் வரை இருக்கும் சூழலில் டெலிவரியும் அந்த பெண்ணின் வீடு தேடி வந்துள்ளது. ஆனால் அதில் டூத் பிரஷ் இருப்பதற்கு பதிலாக மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது அந்த பெண்ணை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு வந்த பார்சல் குறித்து அவரது மகள் டூத் பிரஷ்ஷூக்கு பதிலாக மசாலா பொருட்கள் வந்ததையும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் டீலர்ஸ் குறித்தும் தனது கேள்வியை அந்த பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | பசியோட இருக்காதீங்க.. துருக்கியில் தினந்தோறும் 5000 பேருக்கு சாப்பாடு.. மக்களை நெகிழ வச்ச பிரபல Chef.. வீடியோ..!

Tags : #MUMBAI #WOMAN #ORDER #ONLINE ORDER #ORDERS ELECTRIC TOOTHBRUSH #MASALA ITEMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman Orders electric toothbrush receieve masala items | India News.