KAATRUKKENNA VELI : "அவசரப்பட்டுட்டியே ஹரி..".. அதிர்ச்சியில் சக நடிகர்கள்.. காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகரின் சோக முடிவு.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Feb 17, 2023 12:04 AM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுள் ஒரு சீரியல் காற்றுக்கென்ன வேலி. இளைஞர்கள் பலரும் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த சீரியலில் நடித்த பிரபல நடிகர் ஹரி, விபரீத முடிவால் மரணம் அடைந்துள்ளார்.

Kaatrukkenna Veli Serial actor Hari passed away sad decision

இந்த சீரியலின் கதைப்படி நாயகி, தனது தந்தையின் எதிர்ப்பை மீறி படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருவார். நாயகி வெண்ணிலா மற்றும் நாயகன் இருவருக்கும் இடையிலான காதல் போர்ஷன் இந்த சீரியலில் பலருக்கும் பிடித்தமானது. இதில் வெண்ணிலாவின் கேங்கில் நண்பனாக நடித்திருப்பவர்தான் நடிகர் ஹரி. சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கே உரிய உடல் மொழியினாலும் வசன உச்சரிப்பு ஸ்டைலாலும் பலரது கவன ஈர்ப்பைப் பெற்றார்.

ஆனால் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் உள்ள இவரது வசிப்பிடத்தில் இவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார். இவருடைய இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.  இதனிடையே இவரது மரணம் குறித்து பேசி இருக்கும் சக நடிகர்கள் அவசரப்பட்டு விட்டாயே என்று சொல்லி கதறுவதுடன் இவருடைய மரணம் குறித்த தங்களுடைய அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சின்னத்திரை உலகில் இளம் நடிகராக நகைச்சுவையாக நடிக்க தொடங்கிய ஹரி, முகம் வெளியே தெரிய ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவருடைய நண்பர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #KAATRUKKENNA VELI #SERIAL ACTOR HARI #SERIAL ACTOR DEAD #SERIAL ACTOR SUICIDE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kaatrukkenna Veli Serial actor Hari passed away sad decision | Tamil Nadu News.