பசியோட இருக்காதீங்க.. துருக்கியில் தினந்தோறும் 5000 பேருக்கு சாப்பாடு.. மக்களை நெகிழ வச்ச பிரபல CHEF.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் தினந்தோறும் 5000 பேருக்கு இலவசமாக உணவளித்து வருகிறார் பிரபல சமையல் கலைஞர் ஒருவர். அவரது முயற்சிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த வார திங்கட்கிழமை (பிப்ரவரி 6) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 35000 ஐ கடந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எலும்பை துளைக்கும் குளிர், வாட்டும் பசி என துருக்கி மக்களின் சோகம் நீள்கிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்காக உலக நாடுகள் பலவும் உதவி செய்ய களத்தில் இறங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் பிரபல சமையல் கலைஞரும் தொழிலதிபருமான Nusr-et Gokce துருக்கி மக்களுக்கு உதவி வருகிறார்.
சால்ட் பே உணவகத்தின் நிறுவனரான Nusr-et Gokce துருக்கியை தாயகமாக கொண்டவர். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான கிளைகள் உள்ள நிலையில் சமூக வலை தளங்கள் வாயிலாகவும் இவரை பல லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரம்மாண்ட ட்ரக் மூலமாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்து வருகிறார் Nusr-et Gokce.
Images are subject to © copyright to their respective owners.
தினசரி 5000 பேருக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பசியுடன் காத்திருக்கும் மக்கள் மத்தியில் உணவு ட்ரக் வந்து நிற்கிறது. அதிலிருந்து சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. Nusr-et Gokce-ன் இந்த முன்னெடுப்பை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.