எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக்கிடந்த இளம்பெண்.. பறிபோன பார்வை.. மருத்துவர் கொடுத்த '20-20-20' அட்வைஸ்.. என்னப்பா அது..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிகமான செல்போன் பயன்பாடு காரணமாக கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டிருக்கிறார். இது குறித்து மருத்துவர் எழுதியுள்ள பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இணையமும் சமூக வலைத் தளங்களின் வளர்ச்சியும் இன்றைய நவீன காலத்தில் பல விஷயங்களை நாம் செய்வதற்கு உதவிகரமானதாக இருக்கின்றன. நொடிப் பொழுதில் நமக்கு தேவையான தகவல்களை நம்மால் பெற முடிவதோடு, உலகத்தின் மறு பாதியில் இருக்கும் நபர்களோடும் நம்மால் உரையாடவும் முடிகிறது. அதே வேளையில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என சொல்வதைப் போல அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடும் ஆபத்து என தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர். சுதீப் குமார். இவரிடத்தில் சமீபத்தில் மஞ்சு எனும் இளம் பெண்மணி சிகிச்சைக்காக வந்திருக்கிறார். தன்னுடைய குழந்தையை பராமரிப்பதற்காக வேலையை ராஜினாமா செய்த அவர் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அப்போது பல மணி நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தி வந்திருக்கிறார். சொல்லப்போனால் இரவு நேரத்திலும் வெளிச்சம் அதிகம் இல்லாத அறையில் செல்போனை பயன்படுத்தி இருக்கிறார் இவர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனால் அவருடைய பார்வை குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சில நேரங்களில் பார்வை குறைவும் ஏற்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து சில வினாடிகளுக்கு எதையுமே பார்க்க முடியாத சூழ்நிலையில் மஞ்சு சிக்கிக்கொள்ள உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதித்த கண்மருத்துவர் மூளை நரம்பியல் நிபுணரான சுதிரை சந்திக்கும்படி மஞ்சுவிடம் கூறியிருக்கிறார். அப்போது மஞ்சுவிற்கு மருந்துகளை வழங்குவதற்கு பதிலாக ஆலோசனைகளை கொடுத்திருக்கிறார் டாக்டர் சுதீப்.
மேலும் மஞ்சுவுக்கு ஸ்மார்ட் போன் விஷன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடு ஏற்பட்டதையும் டாக்டர் சுதிர் கண்டறிந்திருக்கிறார். இதனையடுத்து செல்போன் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்துவிடுவதாக மஞ்சு கூறியிருக்கிறார். அப்போது தொடர் ஆலோசனை மூலமாக மஞ்சு படிப்படியாக குணமடைந்து தற்போது பரிபூரணமாக நலமடைந்திருக்கிறார். கணினிகளில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கும் இந்த சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கும் டாக்டர் சுதிர் ஆலோசனை ஒன்றையும் வழங்கி இருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அதாவது 20 நிமிடங்கள் போனை பயன்படுத்தினால் அடுத்த 20 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். அப்போது 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கும்படி வலியுறுத்தியுள்ளார் அவர். இதனை 20-20-20 ரூல் என்கிறார்கள் மருத்துவர்கள். டாக்டர் சுதிரின் இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
A common habit resulted in severe #vision impairment in a young woman
1. 30-year old Manju had severe disabling vision symptoms for one and half years. This included seeing floaters, bright flashes of light, dark zig zag lines and at times inability to see or focus on objects.
— Dr Sudhir Kumar MD DM🇮🇳 (@hyderabaddoctor) February 6, 2023
Also Read | பள்ளி மாணவியின் உருக வைக்கும் பாடல்.. ரசித்து கேட்டு பாராட்டிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ..!