பள்ளி மாணவியின் உருக வைக்கும் பாடல்.. ரசித்து கேட்டு பாராட்டிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 10, 2023 08:08 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார். அப்போது மாணவி ஒருவரின் பாடலை அவர் ரசித்து கேட்டு பாராட்டும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PM Modi lauds girl for her song at vande bharat express inauguration

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாசம் வைக்க..நேசம் வைக்க.. ரோஹித்தின் பட்டாசான செஞ்சுரி.. உடனே ஜடேஜா செஞ்சது தான்.. நெகிழ்ந்த ரசிகர்கள்.. வீடியோ..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய ரயில்களும் மும்பை - ஷீரடி மற்றும் மும்பை - சோலாப்பூர் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. மும்பை - சோலாப்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போர் காட் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் 455 கிமீ தூரத்தை 6.35 மணி நேரத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மும்பை - ஷீரடி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தால் காட் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் வந்தே பாரத் ரயில் 5.25 மணி நேரத்தில் 340 கிமீ தூரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இன்று நடைபெற்ற துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மகாராஷ்டிர முதல்வரும் துணை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது ரயிலில் பயணம் செய்த மோடி அங்கிருந்த பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

Images are subject to © copyright to their respective owners.

அதன்பின்னர் சிறுமி ஒருவர் உணர்வுப்பூர்வமாக பாடலை பாட பிரதமர் மோடி அதனை ரசித்து கேட்கிறார். பின்னர் 'வாவ்' என கைதட்டி அந்த சிறுமியை பாராட்டுகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | பிப்ரவரி 14-ல் பசு அரவணைப்பு தினம்.. வாபஸ் பெற்றது இந்திய விலங்குகள் நல வாரியம்.!

Tags : #NARENDRAMODI #PM NARENDRA MODI #PM MODI #GIRL #VANDE BHARAT EXPRESS #VANDE BHARAT EXPRESS INAUGURATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. PM Modi lauds girl for her song at vande bharat express inauguration | India News.