கேரளா: 2 பெண்கள் பலியான அதிர்ச்சியே விலகாத நேரத்துல.. கைதான இன்னொரு பெண் மந்திரவாதி.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் இரண்டு பெண்கள் பலியான சம்பவம் குறித்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் மீளாத நிலையில், இன்னொரு பெண், மாந்திரீகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகியிருப்பது அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

Also Read | கேரளா - இரண்டாவது பெண் பலியான பின்.. குற்றவாளி போட்ட பதிவு?.. திடுக்கிட வைத்த பின்னணி!!
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்தி என்ற சோபனா. இவர் அருகில் வசித்துவந்தவர்களை வலுக்காட்டாயமாக தான் செய்யும் மந்திர பூஜையில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தகவல்கள் பரவிய நிலையில் அவரை காவல்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்திருக்கின்றனர். இளம் வயதினரை வலுக்கட்டாயமாக பூஜையில் பங்கேற்க வற்புறுத்தியதாக தகவல் அறிந்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பத்தினம்திட்டா துணைக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.நந்தகுமார் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், வசந்தியின் நண்பர் எனச் சொல்லப்படும் உன்னிகிருஷ்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இதனிடையே, பத்தினம்திட்டா மாவட்டத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்திருக்கிறது கேரள காவல்துறை. இந்த குழுவுக்கு கொச்சி நகர துணை கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) எஸ் சசிதரன் தலைவராகவும், பெரும்பாவூர் ஏசிபி அனூஜ் பாலிவால் தலைமை விசாரணை அதிகாரியாகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய இரு பெண்களை கொலை செய்ததாக முகமது ஷபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி, இரு பெண்களையும் முகமது ஷபி, பகவல்சிங் - லைலா வீட்டுக்கு அழைத்துச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இந்த மூவருக்கும் 26 ஆம் தேதிவரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களிலும், காயங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மந்திர பூஜை செய்வதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
