'கொரோனாவால் படுத்த படுக்கையான கணவன்'... 'திபு திபுவென அறைக்குள் வந்த மனைவி'... கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்த ’அந்த’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனையால் பாதிக்கப்படுவது என்னவோ அவர்களின் குழந்தைகளாகத் தான் இருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அன்சாரியின் பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களும் தொற்றுக்கு ஆளான நிலையில் அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அன்சாரி வீட்டுக்குச் சமீபத்தில் அவரின் மனைவி 6 பேரை அழைத்துக் கொண்டு திடீரென வந்துள்ளார். அன்சாரியின் வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அன்சாரி படுக்கையறையில் இருந்த நிலையில் அவரது மனைவி மற்றும் அவர் அழைத்து வந்த 6 பேரும் அன்சாரியின் படுக்கையறைக்குச் சென்றார்கள். இதனைச் சற்றும் எதிர்பாராத அன்சாரி நிலைகுலைந்து போனார்.
பின்னர் தனது கணவன் கொரோனா நோயாளி என்றும் பாராமல், அவரை அன்சாரியின் மனைவி சரமாரியாகத் தாக்கினார். இதில் அன்சாரியின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், கொரோனா தொற்றின் வீரியத்தை உணராமல் அன்சாரி மனைவி அப்படி நடந்து கொண்டது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து தனது இரண்டு குழந்தைகளை அங்கிருந்து அவர் அழைத்துச் சென்றிருக்கிறார். கொரோனா பீதி காரணமாக யாரும் அங்கு உதவிக்கு வராத நிலையில், ஒருவர் மட்டும் அங்கு நடந்ததை எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அன்சாரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தனது குழந்தைகளை அவர் எங்கே அழைத்துச் சென்றார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. தற்போது காவல்துறையில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
