சல்மான் கான் 'குதிரை'யை வாங்க ஆசைப்பட்ட 'பெண்'... "செம 'டீல்'ன்னு 'ஓகே' சொன்னாங்க... ஆனா பாவம் இப்டி ஆயிடுச்சே!!"
முகப்பு > செய்திகள் > இந்தியாகுதிரை மீது அதிக அன்பு கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான், அதனுடன் அதிக நேரங்களை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வப்போது குதிரையுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஒருபெண்ணிடம் சல்மான் கான், அவரது பண்ணை வீட்டில் குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி, இந்த குதிரை விற்பதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் முதலில் இதனை நம்பவில்லை. இதனையடுத்து, அந்த மூன்று பேரும் அந்த பெண்ணின் மனதை மாற்றி நம்ப வைத்துள்ளனர்.
இந்த குதிரையை வாங்கி, சல்மான் கானின் குதிரை என நீங்கள் விற்றால் இன்னும் அதிக பணம் பெறலாம் என்று கூறி, அவரின் ஆசையைத் தூண்டியுள்ளனர். இதன் பிறகு, அந்த பெண் 12 லட்ச ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்து அந்த பணத்தையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த மூன்று பேரும் குதிரையை பெண்ணிடம் ஒப்படைக்கவில்லை.
இதனால், மோசடிக்காரர்கள் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அவர் புகாரளித்தும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக, அந்த பெண் ஜோத்பூர் நீதிமன்றத்தை நாடி, நேர்மையாக தனக்கு நடந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட காவல்துறை துணை கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்து ஆணையிட்டார். இதன்படி, பல மாதங்களாக பணமிழந்து தவித்து வந்த பெண்ணை ஏமாற்றிய மோசடி பேர்வழிகள், விரைவில் போலீசார் கையில் அகப்படுவார்கள் என தெரிகிறது.

மற்ற செய்திகள்
