'புதுசா போட்ட ரோடு...' திறப்பு விழால 'சூரத்தேங்காய்' உடைச்சப்போ 'தேங்காய்' உடையல,...! - திறப்பு விழா மூடு விழாவாக மாறிய சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் புதிதாக போட்ட தார் சாலையில் தேங்காய் உடைத்த போது சாலை உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் பகுதியில் சுமார் ரூ.1.16 கோடி செலவில் சாலைகள் புனரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது சாலை போடப்படும் பணிகள் முடிவடைந்த நிலையில் அதனை திறந்து வைக்க பிஜ்னோர் சதார் தொகுதியின் எம்.எல்.ஏ., சுசி மவுசம் சவுத்ரி வந்துள்ளார்.
திறப்பு விழாவின் போது பேசிய எம்.எல்.ஏ., சுசி மவுசம் சவுத்ரி, தனது தொகுதியில் நீர்பாசனத் துறையினரால் ரூ.1.16 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டத்தில் மகிழ்ச்சி என கூறினார். அதன் பின் எம்.எல்.ஏ சடங்கிற்காக சூரத்தேங்காயை புதிய சாலையில் உடைத்துள்ளார்.
அப்போது அந்த தேங்காய் உடையாமல் சாலை உடைந்து சிதறிய சம்பவம் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டு கோபமடைந்த எம்.எல்.ஏ சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு செய்ய கோரினார்.
அதிகாரிகள் வந்து மாதிரியை எடுத்து செல்லும் வரை சுமார் 3 மணி நேரம் அங்கேயே இருந்துள்ளார் எம்.எல்.ஏ., சுசி மவுசம் சவுதிரி.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சாலையை திறந்து வைப்பதற்காக தேங்காய் உடைக்க முயன்றபோது தேங்காய் உடையாமல் சாலையின் சிறு துண்டுகள் சிதறி வெளியேறியது.
இதனால் கட்டுமானத்தில் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. சாலை பணிகள் தரமானதாக இல்லை. அதனால் இப்போதைக்கு திறப்பு விழாவை நிறுத்திவிட்டோம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசியப்போது அவர் உடனடியாக 3 பேர் கொண்ட குழுவை அமைத்து சாலையின் மாதிரிகள் அனுப்பி வைத்துள்ளார். அடுத்த நடைவக்கையாக தரமற்ற சாலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

மற்ற செய்திகள்
