கல்லூரி SEMESTER எக்ஸாம் எப்போ ஆரம்பம்?.. யூஜிசி வெளியிட்ட அதிரடி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 30, 2020 08:10 AM

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

UGC released semester exam dates college reopening date

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியது. மேலும் பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஊரடங்கின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் செம்ஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தன. இதனால் மாணவர்களும் தேர்வு எப்போது நடைபெறும் என குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என யூஜிசி அறிவித்துள்ளது. அதில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதம் நடத்தலாம் என்றும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி  இண்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேட் வழங்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆகஸ்ட மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.