Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

"அந்த நேரத்துல அவர்கிட்ட பணமே இல்ல".. அப்பாவுக்கு மஸ்க் போட்ட கண்டீஷன்.. நினைவை சோகத்துடன் பகிர்ந்த எலான் மஸ்க்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Sep 22, 2022 07:21 PM

உலகின் நம்பர் 1 பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது தந்தை குறித்து பகிர்ந்திருக்கும் ட்வீட் இணையவெளிகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Elon musk Tweet about his father amid emerald mine issue

Also Read | நடுவானில் விமானி வெளியிட்ட தகவல்.. உடனே கண்கலங்கிய பெண்.. கைதட்டி உற்சாகப்படுத்திய பயணிகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Elon musk Tweet about his father amid emerald mine issue

மஸ்க் போட்ட கமெண்ட்

பெர்க்லி பேராசிரியரும் மற்றும் முன்னாள் அமெரிக்க தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளருமான ராபர்ட் ரீச் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் சொந்தமாக எமரால்ட் சுரங்கம் வைத்திருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று ரீச் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் கமெண்ட் செய்திருந்த மஸ்க்,"நீங்கள் ஒரு முட்டாள் மற்றும் பொய் கூறுபவர்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த விஷயம் ட்விட்டர் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் எலான் மஸ்க் குடும்பத்தாரிடம் எமரால்ட் சுரங்கம் இருந்ததா? எனக் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை குறித்து பதிவிட்டிருக்கிறார். அதில் தனது தந்தை எர்ரோல் மஸ்க் பணம் இன்றி சிரமமப்பட்டதாகவும், தானும் தனது சகோதரரும் அவருக்கு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Elon musk Tweet about his father amid emerald mine issue

ஆதரவு

எலான் மஸ்க் தனது பதிவில்,"90களில் எரோல்-இடம் பணம் இல்லாமல் போனது. எனது சகோதரரும் நானும் தென்னாப்பிரிக்காவில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பொருளாதார ரீதியாக ஆதரவளித்தோம். அப்போது தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதித்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக, அவர் மோசமான செயல்களைச் செய்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சோக ஸ்மைலியையும் அவர் தனது பதிவில் பயன்படுத்தியிருக்கிறார்.

Also Read | நேத்துவரை கார் கிளீனர்.. ஆனா இப்போ கோடீஸ்வரர்.. ஒரே இரவில் மாறிய வாழ்க்கை.. Check-அ வாங்கிட்டு மனுஷன் ஒன்னு சொன்னாரு பாருங்க..!

Tags : #ELON MUSK #ELON MUSK TWEET #ELON MUSK TWEET ABOUT HIS FATHER #ELON MUSK FATHER #EMERALD MINE ISSUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon musk Tweet about his father amid emerald mine issue | World News.