"வாழ்க்க ரொம்ப கொடூரமானது.. மிஸ் யூ அப்பா".. ஷேன் வார்னே மகள் போட்ட பதிவு.. கண்கலங்கிய கிரிக்கெட் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மறைந்த ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய அணியின் மாபெரும் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் மகள் தனது தந்தை குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு அனைவரையும் கலங்க வைத்து இருக்கிறது.

ஷேன் வார்னே
விடுமுறையை கழிக்க, தனது நண்பர்களுடன் தாய்லாந்தில் உள்ள விடுதிக்கு ஷேன் வார்னே சென்று இருந்தார். அப்போது அவரது அறையில் மாரடைப்பால் வார்னே மரணம் அடைந்தார். இதனை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் வார்னேவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வார்னேவின் மூத்த மகளான புரூக் வார்னே தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மிஸ் யூ அப்பா
வார்னேவின் மூன்று குழந்தைகளில் மூத்தவரான புரூக் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில்,"அப்பா என் இதயம் உடைந்து விட்டது. நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சீக்கிரமே எங்களை விட்டு நீங்கள் சென்றுவிட்டீர்கள். கேலி செய்து கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை என்றும் நினைவில் வைத்து இருப்பேன். வாழ்க்கை மிகவும் கொடூரமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய நகைச்சுவை உணர்வு குறித்துப் பேசிய புரூக்," நாம் பல வழிகளில் ஒரே மாதிரியாக இருந்தோம். உங்கள் மரபணுக்கள் எனக்கு கிடைத்ததை பற்றி நான் எப்போதும் கேலி செய்வேன். அது என்னை எவ்வளவு எரிச்சலூட்டியது என்று நான் நகைச்சுவையாகப் பேசுவேன். ஆனால், நான் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன். உங்களை அப்பா என்று அழைப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. மிஸ் யூ அப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த ஷேன் வார்னேவின் மகள் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
