T20 போட்டி "பறந்தது எல்லாம் சிக்ஸ், ஃபோர் தான்".. 150+ அடிச்சு கலக்கிய "குட்டி ஏபிடி".. "GAYLE ரெக்கார்டு காலி".. மிரண்ட ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுட்டி ஏபிடி என வர்ணிக்கப்படும் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டெவால்டு ப்ரேவிஸ், டி 20 தொடர் ஒன்றில் சதமடித்து பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டெவால்டு ப்ரேவிஸ். Mr 360 என அழைக்கப்படும் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் போல ப்ரேவிஸ் ஆடுவதால், "குட்டி ஏபிடி" என்ற பெயரும் வந்தது.
இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி இருந்த ப்ரேவிஸ், சில சிறப்பான இன்னிங்ஸ்கள் மூலம் கிரிக்கெட் உலகில் அதிக கவனம் ஈர்த்திருந்தார்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் டி 20 தொடர் ஒன்றில் 150 ரன்கள் அடித்த ப்ரேவிஸ், கெயில் உள்ளிட்ட பலரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார். CSA T20 சேலஞ்ச் தற்போது தென் ஆப்பிரிக்காவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் Titans மற்றும் Knights ஆகிய அணிகள் மோதி இருந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த Titans அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய Knights அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 41 ரன்கள் வித்தியாசத்தில் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி இருந்த ப்ரேவிஸ், 57 பந்துகளில் 162 ரன்கள் (13 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்) சேர்த்து பட்டையைக் கிளப்பி உள்ளார். இதன் மூலம், டி 20 போட்டியில் அதிக ரன் அடித்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் என்ற பெருமையை ப்ரேவிஸ் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு பீட்டர் மலான் மற்றும் டி காக் ஆகியோர் 140 ரன்கள் அடித்ததே தென் ஆப்பிரிக்க வீரரின் தனிநபர் அதிகபட்சமாக டி 20 போட்டியில் இருந்தது. அதே போல, 52 பந்துகளில் 150 ரன்களை ப்ரேவிஸ் தொட்டிருந்த நிலையில், குறைந்த பந்துகளில் 150 ரன்களை டி 20 போட்டிகளில் தொட்ட க்றிஸ் கெயிலின் சாதனையையும் (53 பந்துகளில்) முறியடித்துள்ளார்.
இது தவிர இன்னும் பல சாதனைகளை ஒரே போட்டியில் முறியடித்து காண்பித்துள்ளார் குட்டி ஏபிடி டெவால்டு ப்ரேவிஸ். 19 வயதாகும் ப்ரேவிஸ் இப்படி ஒரு மகத்தான சாதனையை டி 20 தொடரில் படைத்துள்ளதால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.