சபரிமலை செல்பவர்களுக்கு 'புதிய அறிவிப்பை' வெளியிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇனி சபரி மலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்த புதிய வசதியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இந்த நவீன உலகில் அனைத்து பொருட்களை வாங்கவும், அதற்கு தொகை செலுத்தவும் பல செயலிகளும், டிஜிட்டல் பிளாட்போரம்கள் வந்துவிட்டன. அதனை தொடர்ந்து கோவில்களில் போடப்படும் உண்டியல் காசுகளுக்கு பதில் இனி பக்தர்கள் நேரடியாக வங்கி கணக்குக்கே பணம் செலுத்தும் வசதி சபரி மலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இனி ஐயப்ப பக்தர்கள் இ-சேவை மூலம் அதாவது பண பரிவர்த்தனை செயலிக்களான பேடிஎம், கூகிள் பே என பல செயலிகள் மூலம் காணிக்கை செலுத்தி கொள்ளலாம். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சபரிமலை செயல் அலுவலர் கிருஷ்ண குமார வாரியர் கூறும் போது 'பக்தர்கள் சபரி மலைக்கு ஏறும் போதும் சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 பகுதிகளில் காணிக்கை செலுத்த QR Code கொண்ட ஸ்கேனர் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு 9495999919 என்ற எண் மூலம் கூகுள் பே (google pay) வழியாக காணிக்கை செலுத்த முடியும்' எனக் கூறியுள்ளார்.
அதோடு 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் பள்ளி கல்லூரி அடையாள அட்டைகள் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், 10 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு RTPCR சோதனை சான்றிதழ் தேவை இல்லை. எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
11 வயதிற்கு மேல் உள்ளாவர்கள் சபரி மலைக்கு வரும் போது 72 மணிநேரத்துக்குள் RTPCR சோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கூடுதலாக அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது இவற்றையும் ஆர்டர் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.