யப்பா என்ன வெயிலு.. கிளாஸ்ல இருக்குற தண்ணிய பொறுமையா குடிக்கும் கருநாகம்..வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகருநாகம் ஒன்று கிளாசில் இருக்கும் தண்ணீரை பொறுமையாக குடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கருநாகம்
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படி பாம்புகளுக்கு பயப்படாத நபர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் கருநாகம் என்றால் சொல்லவே வேண்டாம். ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட இந்த கருநாகங்கள் சராசரியாக 10.4 முதல் 13.1 அடி வரையில் வளரும். பெரும்பாலும் நிலத்தில் வசிப்பவை என்றாலும், அபாரமாக நீந்தும் திறமை கொண்டவை இந்த கருநாகங்கள்.
கருநாகமாகவே இருந்தாலும் அடிக்கிற வெயில் அவற்றையும் பாதிப்புக்கு உள்ளாக்கத்தான் செய்கிறது. அப்படி நீருக்காக தவித்துவந்த கருநாகம் ஒன்று, கிளாசில் இருக்கும் நீரை அமைதியாக குடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
வைரல் வீடியோ
IFS அதிகாரியான சுனந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை கடந்த ஆண்டு பகிர்ந்திருந்தார் அதில், குரங்கு மற்றும் வாத்துகளுக்கு தர்பூசணி பழத்தை ஒருவர் வழங்குகிறார். வாத்துகளும், குரங்கும் ஆர்வத்தோடு அந்த தர்பூசணியை சாப்பிடுகின்றன. இந்த வீடியோவில்,“Love to share," என்று குறிப்பிட்டிருந்தார் சுனந்தா.
இந்த பதிவில் கமெண்ட் செய்திருந்த என்சிசுகுமார் என்பவர் ஒரு வீடியோவை இணைத்திருந்தார். அந்த வீடியோவில், ஒருவர் கையில் தண்ணீர் கிளாஸுடன் இருக்க, கருநாகம் ஒன்று கிளாசில் இருந்த தண்ணீரை பொறுமையாக குடிக்கிறது. இதில்,"குரங்கு மற்றும் வாத்துகள் தர்பூசணி சாப்பிடுகின்றன. இங்கே நீங்கள் நாகப்பாம்பு ஒன்று கையில் வைத்திருக்கும் கண்ணாடியில் தண்ணீர் குடிப்பதைப் பார்க்கிறீர்கள். இவைகளுக்கும் நீர் தேவை. ஆனால் இவை தண்ணீர் குடிக்க வாயை திறக்காமல் ஒரு சிறிய நாசி துவாரம் மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றன" என பதிவிட்டிருந்தார் அவர்.
சுனந்தாவின் பதிவில் கடந்த ஆண்டு இந்த வீடியோவை சுகுமார் பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.
Monkey and ducklings are eating watermelon and here u are watching the king cobra actually drinking water from a glass held in the hand. They too have to be hydrated then n there.But they don't open the mouth to drink water there is a small nostrils through which they suck water pic.twitter.com/6g2nZUUXke
— ncsukumar (@ncsukumar1) August 23, 2021
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8