கூல்டிரிங்ஸ் கடையில் ‘தண்ணீர்’ குடித்ததும் அலறிய கல்லூரி மாணவர்.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி.. என்ன ஆச்சு ?
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்லூரி மாணவர் விளையாடிவிட்டு வந்த களைப்பில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ‘மறுபடியும் முதல்ல இருந்தா..!’ சீன சுகாதார அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல் என்ன..?!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா (வயது 21). இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .இந்த நிலையில் நேற்று விளையாடிவிட்டு கல்லூரிக்கு அருகே உள்ள கூல்டிரிங்ஸ் கடைக்கு சென்ற சைதன்யா, கடை உரிமையாளரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு அவர், பிரிட்ஜில் உள்ளது எடுத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிரிட்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சைதன்யா குடித்தார்.
அப்போது தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் பாட்டிலை தவறுதலாக மாற்றி குடித்துள்ளார். இதனால் சைதன்யாவின் வாய் மற்றும் குடல் முழுவதும் வெந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தண்ணீர் பாட்டில் அருகில் ஆசிட் ஊற்றி வைத்திருந்த பாட்டிலை சைதன்யா தெரியாமல் குடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த தகவல் கல்லூரி மாணவர்களிடையே பரவியதை அடுத்து, கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கல்லூரி மாணவர் தண்ணீர் பாட்டில் என தவறுதலாக ஆசிட்டை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | “இப்போ இந்த பொருளுக்கு தான் டிமாண்ட் ஜாஸ்தி”.. மணமகனுக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்..!