150 வருஷ பழமையான மரத்திலிருந்து கொட்டும் தண்ணீர்.. பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்மாண்டினீக்ரோ நாட்டில் உள்ள மரம் ஒன்றில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாண்டினீக்ரோ
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டினீக்ரோவில் உள்ளது தினோசா என்னும் கிராமம். இங்கு சுமார் 150 வருட பழமையான மல்பெரி மரம் ஒன்றில் இருந்துதான் இப்படி தண்ணீர் கொட்டுகிறது. பொதுவாக தரையில் இருந்து தண்ணீரை மரங்கள் உறிஞ்சி எடுக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இங்குள்ள மல்பெரி மரம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பைப்பை திறந்தது போன்று தண்ணீரை வெளியேற்றி வருகிறது. இங்கே வரும் சுற்றுலாவாசிகள் இந்த வினோத மரத்தை பார்த்து ஆச்சர்யமடைந்து வருகிறார்கள்.
என்ன காரணம்?
இந்த 150 வருடங்கள் பழமையான மல்பெரி மரம் எல்லா நாட்களிலும் இப்படி தண்ணீரை வெளியேற்றுவது இல்லை. மழைக்காலங்களில் மட்டுமே இந்த அறிய நிகழ்வு நடைபெறுகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமான மழை பெய்யும் நாட்களில் இந்த மரமும் தண்ணீரை வெளியேற்றத் துவங்கும்.
இந்த மரத்தை சுற்றி இயற்கையான பல நீரூற்றுகள் இருக்கலாம் எனவும் மழைக்காலங்களில் அதன் வழியே நீர் வெளியேறும் போது, அழுத்தம் காரணமாக மரத்திற்குள் இருக்கும் துளைகள் வழியாக நீர் மேலேறி, பெரும் துளை ஒன்றின் வழியாக விழுவதே இந்த அதியசயத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள மக்கள் இதனை இயற்கையின் வினோதம் என்றே கருதுகின்றனர். ஐரோப்பாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலருக்கும் இந்த மரத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த மரம் அங்கே பிரசித்திபெற்றது.
சூனிய கிணறு
மாண்டினீக்ரோவில் பழமையான மரத்தில் இருந்து நீர் கொட்டுவது பலரையும் திகைக்க வைக்கும் நிலையில் எஸ்டோனியாவிலும் இதே போன்ற ஒரு அதிசயம் இருக்கிறது. அங்கே மரம் என்றால் இங்கே கிணறு. அதுவும் சூனிய கிணறு.
வட ஐரோப்பாவில் உள்ள எஸ்டோனியா நாட்டின் துஹாலா கிராமத்தில் தான் இந்த சூனிய கிணறு இருக்கிறது. நிலத்தடிக்கு கீழே கடுமையான நீரோட்டம் இருக்கும் பகுதியில் இந்த கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் போது இந்த கிணற்றின் வழியாக தண்ணீர் வேகமாக வெளியேறும். சில சமயங்களில் வினாடிக்கு 100 லிட்டர் அளவுக்கு இந்த கிணற்றில் இருந்து நீரானது வெளியேறுமாம். இந்த வினோதத்திற்கு உள்ளூர்வாசிகள் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். அதாவது அவர்களுடைய புராண கதைகளில் குறிப்பிட்டுள்ளபடி மந்திரவாதிகள் இந்த கிணற்றுக்கு உள்ளே இருந்து ஒருவரை ஒருவர் பீர்ச் எனப்படும் மர கிளைகளால் தாக்கிக்கொள்வதே இந்த தண்ணீர் வெளியேற்றத்திற்கு காரணம் என்கிறார்கள்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8