"ப்ளீஸ், எனக்கு இந்த 'சாப்பாடு' வேண்டாம்...!" 'எவ்ளோ சொகுசா வாழ்ந்த பையன்...' - இப்போ 'என்ன' சாப்பிட்டு வாழுறாரு பாருங்க...? - கலங்கிய 'ஜெயில்'மேட்ஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின் ஆர்யன் கான் அக்டோபர் 3-ம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் ஆர்யனுக்கு ஷாருக்கான் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட சாப்பாடும் மறுக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய மகன் சிறையில் தவித்து வரும் நிலையில் ஷாருக்கானும், அவரின் மனைவியும் தூக்கமில்லாமல் தவிக்கிறார்களாம். ஆர்யன் கானும் சிறையில் கொடுக்கும் உணவை உண்ணாமல், சிறை கேன்டீனில் பிஸ்கட் மற்றும் தண்ணீரை சாப்பிட்டு வருகிறாராம். ஆர்யன் மட்டும் அல்ல அவருடன் சேர்ந்து கை செய்யப்பட்ட நண்பர்களும் சிறை உணவை சாப்பிடாமல் இருக்கிறார்களாம்.
இந்நிலையில் ஷாருக்கானை டார்கெட் செய்யவே அவரது மகனை மகனை போலீசார் போதை பொருள் விஷயத்தில் மாட்டி விட்டுள்ளனர் என பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அதோடு, ஷாருக்கான் முஸ்லீம் என்பதால் தான் அவரின் மகனை கைது செய்துள்ளனர் என்று பேச்சு கிளம்பியிருந்த நிலையில் இப்படி பேசுவது சரியில்லை எனவும் கூறியுள்ளார் சத்ருகன் சின்ஹா.
ஷாருக்கான் மகன் கைது செய்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஷாருக்கானுக்கு சல்மான், ரித்திக் ரோஷன் உள்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
