“எப்ப எங்க அணி இத பண்ணுதோ.. அப்பதான் கல்யாணம்!”.. கிரிக்கெட் பிரபலம் எடுத்த அதிரடி சபதம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு“ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றால்தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என்று அந்த அணியைச் சேர்ந்த ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டரான 21 வயதேயான ரஷித் கான் ஐ.சி.சி மற்றும், டி-20 தரவரிசையில் நம்பர்-1 பவுலராக இஉள்ள சூழலில் 67 ஒருநாள் போட்டிகளிலும் 48 டி-20 போட்டிகளிலும் விளையாண்டு 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான டி-20 தொடரிலும் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை சாய்த்த ரஷித் கான், ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் நிலையில், தனது திருமணம் குறித்து பேசும்போது “உலகக் கோப்பை கிரிக்கெட்டில் என்னைக்கு எங்க ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் பெற்று, கோப்பையை வெல்லுகிறதோ, அதன் பிறகுதான் நிச்சயதார்த்தமோ, திருமணமோ பண்ணிக்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் தற்போதுதான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியான ஆப்கானிஸ்தான் இதுவரை கடந்த 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே உலகக்கோப்பையில் பங்கேற்றதும், அதிலும் பங்கேற்ற 15 போட்டிகளில் 14 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றதும், மீதம் 14 போட்டிகளில் தோற்றதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
