‘அடித்துக் கொன்று ப்ரீசரில் திணிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்ல!’.. ‘மேலும்’ வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 11, 2020 07:25 PM

லண்டனில் வாழும் Zahid Younis(36) என்கிற நபர் காணாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவரது வீட்டை சோதனை செய்த போது, அவரது வீட்டு ப்ரீசரில் ஈக்கள் மொய்ப்பதை போலீஸார் கண்டனர்.

freezer murder accused had history of abusing partners

ப்ரீசரை திறந்து பார்த்தபோதுதான், அதற்குள் 2 இளம் பெண்கள் சடலமாக திணித்துவைக்கப்பட்டிருந்த சம்பவம் பகீர் கிளப்பியது. மேலும் ப்ரீசரில் இருந்த சடலம் அழுகி நாற்றம் வீசத் தொடங்கியதால் Zahid Younis அதே பகுதியில் வேறொரு வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

இதனிடையே ப்ரீசரில் இருந்த இளம் பெண்களின் பெயர்கள் Henriett szus மற்றும் Mihrican mustafa என்றும், இவர்களை Zahid Younis வெவ்வேறு வருடங்களில் கொடூரமாக எலும்புகளில் அடித்துக் கொன்று ப்ரீசரில் வைத்ததாகவும் தெரியவந்தது.

இந்நிலையில், மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்லன. அதன்படி Zahid Younis  தனது காதலி ஒருத்தியை கொஞ்ச காலம் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தியதாகவும், பின்னர் இஸ்லாமிய முறைப்படி 14 வயது சிறுமி ஒருவரை திர்மணம் செய்துகொண்டு அச்சிறுமியையும் கொடுமைப்படுத்தியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நிறுத்தாத Zahid Younis, அதன் பிறகு 17 வயது பெண்ணுடன் பழகி, அப்பெண்ணையும் கொடுமைப்படுத்தியதுடன், கடைசியாக,  Henriett szus மற்றும் Mihrican mustafa ஆகிய 2 பெண்களை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி, கொலை செய்து ப்ரீசரில் வைத்த பின்னர்தான் சிக்கிக் கொண்டுள்ளார்.

ஆனால் இந்த குற்றங்கள் எதையுமே Zahid Younis ஒப்புக்கொள்ளாததால், விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.  பெண்களை அனுபவித்த பின்பு அவர்களை சித்ரவதை செய்து கொல்வதையே வழக்கமாக கொண்டுள்ள Zahid Younis வழக்கு பலரையும் நடுங்கவைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Freezer murder accused had history of abusing partners | World News.