ஆஹா...! மாஸ்க் போடலன்னா ஃபைன் வேற கட்டணுமே...! 'கெடச்சிடுச்சு ஒரு சூப்பர் ஐடியா...' - காக்கா, குருவிலாம் பார்த்தா இப்போ கிளம்பி வந்திடுமே...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 29, 2021 11:39 AM

முகக்கவசம் வாங்க பணம் இல்லததால் முதியவர் செய்த செயல் வாயை பிளக்கவைத்துள்ளது.

Telangana old man wearing a mask in a bird\'s nest

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் மிக முக்கிய ஒன்றாக வலியுறுத்தி வருகிறது.

கொரோனா அதிகரித்து வரும், தெலுங்கானா மாநிலத்தில் பொதுவெளியில் வருபவர்கள் முகக்கவசங்களை காட்டாயம் பயன்படுத்துமாறும், விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின், மக்புப்நகர் மாவட்டத்தில் இருக்கும் சின்னமுனுகல் சாட் நகரைச் சேர்ந்த மேகலா குர்மய்யா என்னும் ஆடு மேய்க்கும் முதியவர் வாழ்த்து வருகிறார்.

இவர் ஓய்வூதியத்தை வசூலிப்பதற்காக மண்டல அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் முகக்கவசம்  அணியவில்லை. முகக்கவசம் அணியாமல் போனால் விதிக்கப்படும் அபராத தொகையை கட்ட நேரிடும் என்பதற்காக ஒரு புதிய வழிமுறையை கண்டு பிடித்துள்ளார்.

அதாவது, ஒரு பறவையின் கூட்டினை எடுத்து அதனை முகக்கவசமாக அணிந்து அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தார். இந்த முதியவரின் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #MASK #BIRD #NEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana old man wearing a mask in a bird's nest | India News.