நானும் ரௌடி தான்...! 'என்னலாம் ஒண்ணும் பண்ண முடியாது...' - கூலிங் கிளாஸ் போட்டுட்டு போலீசாரிடம் தெனாவட்டாக பேசிய பெண்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சையில் தம்மாதுண்டு முக கவசத்திற்கு 200 ரூபாயா என காவலர்களுடன் பெண் சண்டையிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் விதிமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் முக்கியப்பகுதியாக முகக்கவசம் அணிவது கட்டாயமக்கபட்டுள்ளது.
வடநாடுகளில் கொரோனா தாக்கம் கைமீறி சென்று ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதியுறும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்திலும் இந்நிலை வராமல் இருக்க அரசு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது. இந்நிலையில் தஞ்சையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெண் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் முகக்கவசம் அணியவில்லை. அவரை நிறுத்தி 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுள்ளனர் காவல்துறையினர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவலரை பார்த்து, ஒரு மாஸ்குக்கு 200 ரூபாய் கட்ட சொல்றீங்களே? அசிங்கமா இல்லையா? என கேள்வி கேட்டு ஒருமையில் பேசியுள்ளார். மேலும் கலெக்டரின் உத்தரவு என காவலர் சொல்ல, மாவட்ட ஆட்சியரையும் ஒருமையில் பேசியுள்ளார்.
இதனை காவல்துறையினை சேர்ந்த மற்றொரு காவலர் வீடியோ எடுக்கும் போது, 'வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுறியா போடு, என்னை ஒன்றும் செய்ய முடியாது' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.