'வண்டிய நிறுத்துனா அதுவும் நிக்குது...' 'ஸ்டார்ட் பண்ணினா கூடவே வருது...' 'காரணம் தான் அதுல ஹைலைட்...' - 'தாசில்தார நகர விடாத மாடு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலத்தில் பசு மாடு ஒன்று அப்பகுதி தாசில்தார் செல்லும் காரையே அரைமணி நேரம் துரத்தி துரத்தி மடக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் வானபர்த்தி பகுதியில் இருக்கும் பிரஜ வைத்திய சாலையில் பசு மாடு ஒன்று தாசில்தார் செல்லும் வாகனத்தை துரத்தி கொண்டு ஓடியுள்ளது. இதனை கவனித்த தாசில்தார் காரை நிறுத்தி மாட்டை விரட்டியுள்ளார். அதையடுத்து காரை மீண்டும் எடுத்துள்ளார் எதற்கும் அஞ்சாத அந்த பசு மாடு மீண்டும் அவரை பின்தொடர்ந்து ஓடியுள்ளது.
தாசில்தார் செல்லும் கார் நிற்கும் போது மாடும் நின்று பார்ப்பதும், கார் நகரும் போது மாடும் அதனோடு ஓடுவதும் என அரைமணிநேரம் தாசில்தாரை கலங்க செய்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதற்கு காரணம் என்ன என உள்ளூர் வாசிகள் சொல்லும்போது, 'அந்த பசு தங்கியிருந்த கொட்டகையை இந்த தாசில்தார் தான் வேற இடத்துக்கு மாற்றி விட்டாராம்.. அதனால்தான், பசுவானது அவரை விடாமல் துரத்துகிறது' எனக் கூறுகின்றனர். ஆனால் தாசில்தாரோ, 'அந்த பசுக்கு ரொம்ப பாசம்.. அதனாலதான் இப்படி துரத்திட்டு வந்தது.. இதே பசுமாடு, நிறைய பேரை இப்படித்தான் துரத்திட்டு வந்தது. கொட்டகை எல்லாம் வேற இடத்திற்கு மாற்றப்படவில்லை' என தன்னுடைய தரப்பை கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடமும், இணைய வாசிகளிடமும் பரவி வருகிறது.