கல்யாணத்து அன்னைக்கு வழுக்கி விழுந்த மாப்பிள்ளை.. "ஹாஸ்பிடல்'ல அட்மிட் பண்ணப்போ தான்".. உண்மை தெரிய வந்துருக்கு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போதைய காலகட்டத்தில், திருமணம் நடைபெற இருக்கும் சமயத்தில், அதனை சுற்றி நடைபெற்று வரும் அதிர்ச்சி சம்பவங்கள், அதிகம் அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் கூட, தாமதமாக மாப்பிள்ளை வந்ததால், வேறொரு வாலிபருடன் மணப்பெண்ணுக்கு திருமணம் நடந்ததும், குடித்து விட்டு மாப்பிள்ளை மேடைக்கு வந்ததால், திருமணம் வேண்டாம் என மணப்பெண் எடுத்த முடிவு என கடைசி நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து அபப்டியே மொத்த சம்பவத்தையும் தலை கீழாக மாற்றும்.
அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹனம்கொண்டா என்னும் பகுதியை சேர்ந்தவர் அன்வேஷ். US-ல் மென்பொருள் ஊழியராக அவர் பணிபுரிந்து வரும் நிலையில், இவருக்கும் அருகேயுள்ள மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்தில் தனது திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் அன்வேஷ் வலியுறுத்தி இருந்தார்.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி, அன்வேஷிற்கு திருமணம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முன்னதாக, பெண் வீட்டார் நிச்சயதார்த்தின் போது, 15 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுத்த நிலையில், 10 லட்ச ரூபாயை திருமணத்தன்று தருவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.
தொடர்ந்து, திருமண நாளும் வந்ததையடுத்து, வேலைகள் அனைத்தும் சிறப்பாக அரங்கேறி வந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணமகனான அன்வேஷ், கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறி, அவரை மருத்துவமனையில் சேர்க்கவும் செய்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மீண்டும் தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அன்வேஷ் கூறி உள்ளார்.
தொடர்ந்து, வேறு மருத்துவமனையில் அவரை உறவினர்கள் சேர்த்துள்ளனர். அப்போது, அவருக்கு அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு எந்தவித பிரச்சனைகள் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனால், அன்வேஷ் ஏதோ நாடகமாடுவதை அனைவரும் அறிந்துள்ளனர்.
ஐந்து மணி நேரமாக அனைவரையும் திருமண நாளில் அலைக்கழித்தது பற்றி, அதிர்ச்சி காரணம் ஒன்றையும் அன்வேஷ் கூறி உள்ளார். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாமல் இப்படி செய்ததாக அன்வேஷ் கூறியதும், மணப்பெண்ணின் உறவினர்கள், அவரை அடிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம், அங்கிருந்த அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், திருமணத்தை நிறுத்தவும் இரு வீட்டார் முடிவு செய்துள்ளனர்.