'இதையா கேட்டோம்?'.. 'கனமழையால் கட்டிடத்துக்கு நேர்ந்த கதி' ..'உலுக்கிய காட்சி'.. பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 12, 2019 11:41 AM
இந்தியாவின் தெற்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் பெய்துவரும் கனமழை பொதுமக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலையும் ஆபத்தையும் நாளுக்கு நாள் தந்து வருகிறது.
மேற்கண்ட பகுதிகளில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே சுவர்கள் இடிந்துவிழுவதும், மண் சரிவு உண்டாவதும் என அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இதனால் சாலை விபத்து உள்ளிட்ட பலவும் இந்த கனமழையில் நடந்துள்ளன. இதில் தற்போது வரை 170 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வயநாட்டில் முன்னதாக நிலச்சரிவும் புதையுண்ட 59 பேரை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடந்து வருகிறது. தவிர மொத்த கேரளாவிலும் 72 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் உத்தரகாண்டில், சமோலி மாவட்டத்தில் உள்ள லங்கி என்கிற கிராமத்தில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடு ஒன்று மழை வெள்ளத்தில் இடிந்து, சரிந்து விழுந்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு வீடான இந்த வீடு முற்றாக சரிந்து விழுந்தபோது, எத்தனை பேர் வீட்டினுள் இருந்தார்கள் என்பன குறித்த தகவல்களை விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ ஏஎன்ஐ-யில் வெளியாகியுள்ளது.
#WATCH House collapses as flash flood hits Vikas Khand Ghat's Lankhi village, in Chamoli, #Uttarakhand. State Disaster Response Force team has been rushed to the spot for rescue operation. pic.twitter.com/7KS2VVukcL
— ANI (@ANI) August 12, 2019