அவங்க கேட்பதை கொடுங்க... ஆதார், ரேஷன் கார்டு தேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Jan 10, 2022 08:10 PM

டெல்லி: பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Supreme Court orders provision for sex workers

கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களின் வேலை நின்றுவிட்டது. கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கும் முன்னரே  பாலியல் தொழிலாளர்கள் தாமாகவே முன் வந்து தொழிலை நிறுத்தி விட்டனர். பாலியல் தொழிலாளர்களுக்கு மூலதனமே அவர்களது உடல்தான்.

ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்த சமூக விலகல்தான் ஒரே தீர்வு என்பதால், தற்போது அவர்களுக்கான வருமானம் என்பதும் இல்லை. அவர்களுக்கு உதவியாக இருப்பது தன்னார்வ தொண்டு நிறுவனம் மட்டுமே. காய்ச்சல், தலைவலி வந்தால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத சோகம். மருத்துவமனையில் அவர்களை ஒதுக்கி வைக்கும் பார்வை நீடிக்கிறது. அவர்களால் பிறருக்கு நோய் பரவி விடும் என்ற தவறான கண்ணோட்டமே இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் விலகியே இருக்கிறார்கள். 

இதை எங்களால நம்பவே முடியல.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள் - இந்தியாவில் மீண்டும் தென்பட்ட அரியவகை உயிரினம்..!

Supreme Court orders provision for sex workers

 

ரேஷன் கார்டு, ஆதார் அட்டை இருப்பவர்களுக்குதான் அரசு நிவாரணம் கிடைக்கிறது. பாலியல் தொழிலாளர்களுக்கு அதற்கு கூட வழியில்லை.

இந்நிலையில்,  தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தது.

Supreme Court orders provision for sex workers

இந்த மனு மீதான விசாரணையின் போது அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

ரேஷன் பொருட்களை அடையாள அட்டை இல்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

காதலன் திருமணத்த நிறுத்தணும்.. ஹாஸ்பிடல்'ல குழந்தையை திருடி.. பெண் போட்ட திட்டம்.. தலையே சுத்துதுப்பா சாமி

Tags : #SUPREME COURT #உச்சநீதிமன்றம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Supreme Court orders provision for sex workers | India News.