உங்க 'உயிரோட' நாங்க விளையாட விரும்பல...! ஸோ, 'அதெல்லாம்' பண்ண முடியாது...! மீண்டும் 'தடுப்பூசி' போட 'அனுமதி' கேட்ட நபர் - உச்சநீதிமன்றம் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவாக்சின் தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக வெளிநாட்டிற்கு செல்ல முடியவில்லை என்றும், மீண்டும் கோவிஷீல்ட் உள்ளிட்ட வேறு தடுப்பூசி செலுத்த அனுமதிக் கோரி ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களை மீண்டும் தடுப்பூசி போடச் சொல்லி அவர்களுடைய விலை மதிப்பில்லா உயிர்களுடன் விளையாட விரும்பவில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கோவாக்சின் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. எனவே மனுதாரரின் பிரச்சினைக்குத் வெகு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கோவாக்சினின் 3-வது கட்ட பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே அதற்கு ஏன் அதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்றும் மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் வரையிலும் சுமார் 7 கோடி டோஸ்கள் கோவாக்சின் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகியவற்றில் தேர்வு செய்யவும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் மே 1 முதல் தான் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டதையும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.