'காணொலிக் காட்சி மூலம்கட்டிலில் படுத்தபடி' வாதாடிய 'வக்கீல்...' 'கடுப்பான நீதிபதி!...' 'வழக்கறிஞருக்கு வார்னிங்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாவழக்கு விசாரணையின்போது டி -சர்ட் அணிந்து கொண்டு கட்டிலில் படுத்தபடி வழக்கறிஞர் வாதாடியதை கண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எரிச்சலடைந்தார். நீதிமன்றத்தை காணொலிக்காட்சி மூலமாக அணுகினாலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று காட்டத்துடன் தெரிவித்தார். இதையடுத்து தனது செயலுக்கு வழக்கறிஞர் மன்னிப்புக் கேட்டு கொண்டார்.

கொரோனா அச்சத்தின் காரணமாக, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தற்போது காணொலிகாட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் அணிய வேண்டிய உடைகள் குறித்து, உச்ச நீதிமன்ற நிர்வாகம் அண்மையில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டீ சர்ட் அணிந்தபடி, கட்டிலில் படுத்துக் கொண்டு வாதாடினார்.
இதனை கவனித்த நீதிபதி, காணொலிகாட்சி வாயிலாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை வழக்கறிஞர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது குறைந்தபட்ச ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தனது செயலுக்காக நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மற்ற செய்திகள்
