“இப்போ இந்த பொருளுக்கு தான் டிமாண்ட் ஜாஸ்தி”.. மணமகனுக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணத்தில் மணமகனுக்கு நண்பர்கள் வித்தியாசமாக கொடுத்த பரிசு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Also Read | ‘மறுபடியும் முதல்ல இருந்தா..!’ சீன சுகாதார அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல் என்ன..?!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள தாரோஜி என்ற பகுதியில் தினேஷ் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் மணமகனின் நண்பர்கள் அவர் மறக்க முடியாதபடி வித்தியசமான கிப்ட்டை கொடுக்க வேண்டும் என முடிவ செய்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் கோடை காலம் உச்சம் தொட்டுள்ளதால் எலுமிச்சை பழத்திற்கு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கிலோ ரூ.200-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை விளைச்சல் இந்த ஆண்டு குறைந்து காணப்படுவதால் சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதனால் மணமகனுக்கு எலுமிச்சை பழத்தை பரிசாக இரண்டு சிறிய பெட்டியில் வைத்து கொடுத்துள்ளனர். இப்போது மாநிலத்தில் விலை உயர்ந்த பொருளாக எலுமிச்சை இருப்பதாகவும், கோடை காலத்திற்கு ஏற்ற பரிசு இதுதான் என்றும் மணமகனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நண்பர்களின் இந்த வித்தியாசமான பரிசு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
சமீப காலமாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் ஆங்காங்கே திருமணங்களில் பெட்ரோலை பரிசாக அளிப்பதும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
