‘மறுபடியும் முதல்ல இருந்தா..!’ சீன சுகாதார அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல் என்ன..?!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஊரடங்கு காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. தினமும் 20000-க்கு மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் தொற்றை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 2417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அறிவித்தபின் ஏற்படும் முதல் கொரோனா உயிரிழப்பு இதுதான். மீண்டும் சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை கலக்கமடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
