SSC அறிவிப்பு: +2 படிச்சிருந்தா போதும் 80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் தற்போது +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான SSC CHSL தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்எஸ்சி சிஎச்எஸ்எல் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில், குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒண்ணுமே தெரியலை ஒரே இருட்டா இருக்கு.. தலைகீழாக மாறி போன எக்ஸாம்.. பெற்றோர் செய்த செயல்!
விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான தேதி 02.02. 2022 முதல் 07-03-2022 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: 07-03-2022 & 23:30 மணி வரை ஆகும். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: 08-03-2022, 23:30 மணி ஆகும். சலான் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 9ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை சரிபார்த்து மறுமுறை அனுப்ப மார்ச் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை அவகாசம். கணினி அடிப்படையிலான தேர்வு மே மாதம் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பத்திற்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆவணச் சரிபார்ப்புச் சுற்றில், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற்றதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல்கள் பள்ளியில் படித்ததற்கான பட்டப்படிப்புச் சான்றிதழ் போன்றவற்றின் அசலை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
5000 பேருக்கான பணியிடங்கள் அமர்த்தப்படவுள்ளன. 12ம் வகுப்பு தேர்ச்சி மூலம் கம்யூட்டர் மூலம் டேட்டா என்ட்ரி தெரிந்திருக்க வேண்டும். கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் 19ஆயிரம் முதல் 81ஆயிரம் வரையிலான ஊதியத்தில் பணியில் சேர்க்கப்படுவர்.
நம்ம ஊர்ல கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி.. அவுங்க ஊர்ல தலையணை போட்டி.. ரவுண்ட் கட்டிய வீரர்கள்!