'வாய்க்கு வந்தத பேசாதீங்க'!.. பூதாகரமான சம்பள பாக்கி சர்ச்சை!.. மர்மங்களை உடைத்த பிசிசிஐ அதிகாரி!.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய ஆண்கள் அணிக்கு சரியாக ஊதியம் கொடுக்கும் பிசிசிஐ, மகளிர் அணியினருக்கு மட்டும் சரியாக ஊதியத் தொகையை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பூதாகரமாகியுள்ளது.

இந்திய மகளிர் அணி விவகாரங்களில் பிசிசிஐ பாரபட்சம் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக வழுத்து வருகிறது. முதலில் போட்டி தொடர்கள் சரியாக ஏற்படுத்தி தரவில்லை என்ற புகார் எழுந்த நிலையில் தற்போது ஊதிய பிரச்னையில் வந்து நின்றுள்ளது.
இந்திய மகளிர் அணிக்கு அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை காலக்கட்டத்திற்கான ஊதிய ஒப்பந்தத்தை கடந்த மே 19ம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. அதில் இளம் வீராங்கனைகள் ரிச்சா கோஷ், சஃபாலி வெர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டிருந்தனர். ஆனால் வேதா கிருஷ்ணமூர்த்தி, எக்டா பிஷ்ண்ட், அனுஜா பாட்டில், டி.ஹேமலதா அகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால், அவர்களுக்கு கடந்த 8 மாதத்திற்கான ஊதியத்தை பிசிசிஐ வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. பிசிசிஐ-இன் ஒப்பந்தம் படி, அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரைக்குமான ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அவர்கள் 4 பேரும் அக்.2020 முதல் மே.2021 வரை என 8 மாதங்கள் அணிக்காக விளையாடியுள்ளனர். எனவே அதற்கான ஊதியத்தை பிசிசிஐ வழங்கப்பட வேண்டியுள்ளது என தகவல் பரவியது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை பிசிசிஐ மறுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ-யிடம் இருந்து வெளியாகியுள்ள தகவலில், அனைத்து வீராங்கனைகளுக்கும் ஒப்பந்த விதிமுறைகளின் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் ஒப்பந்த நாட்களுக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2020ம் ஆண்டு உலகக்கோப்பை பரிசுத்தொகையும் இன்னும் மகளிர் அணிக்கு வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பிசிசிஐ சார்பில், வீராங்கனைகளின் இன்வாய்ஸ் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், வீரர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து பதிலளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
