"சைக்கிள் 'கேப்'ல 'RCB'எ செஞ்சு விட்ட 'யுவராஜ்' சிங்,,.. வேற லெவலில் வைரலாகும் 'கமெண்ட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர் அணி, தங்களது எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.
![Yuvraj Singh makes fun at Chahal after RCB’s elimination Yuvraj Singh makes fun at Chahal after RCB’s elimination](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/yuvraj-singh-makes-fun-at-chahal-after-rcb-s-elimination.jpg)
இதுவரை ஒருமுறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த முறை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. இந்நிலையில், பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல், தனது ட்விட்டர் பக்கத்தில் GoPro கேமராவை விளம்பரப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நக்கலாக கமெண்ட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'இறுதிப் போட்டியை Gopro மூலம் பார்க்கப் போகிறீர்களா அல்லது மைதானம் சென்று பார்க்கப் போகிறீர்களா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியதைத் தான் யுவராஜ் சிங் அப்படி நக்கலாக குறிப்பிட்டுள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த கமெண்ட் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
Your going to watch the final on go pro or going to stadium to watch ? 🤪
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 8, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)