‘செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய குடும்பம்!’.. திடீரென நடந்த ‘பயங்கரம்!’.. தாய், மகன்கள் உயிரிழந்த சோக சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கியதால், இரவோடு இரவாக கரூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூரில் உணவகம் நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு தீக்ஷித் மற்றும் ரக்ஷித் என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்றிரவு செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கியுள்ளனர். இந்நிலையில் இரவோடு இரவாக செல்போன் திடீரென வெடித்தது. இதனால் தாய் முத்துலட்சுமி மற்றும் மகன்கள் என 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவலறிந்து வந்த ராயனூர் போலீஸார், நடந்த சம்பவத்திற்கு மின்கசிவு உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறார். இதனிடையே செல்போன்களுக்கு அதிக மின்னூட்டம் அளிப்பது எப்போதுமே ஆபத்து என்றும், தரமில்லாத பேட்டரிகளால் செல்போன்கள் வெடிப்பதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
